வழிகாட்டல்கள்: பயனர் இடைமுகம்

From Waves Wiki
Jump to: navigation, search
This page is a translated version of the page Tutorials: The User Interface and the translation is 100% complete.

Other languages:
العربية • ‎беларуская • ‎čeština • ‎Deutsch • ‎Ελληνικά • ‎English • ‎español • ‎français • ‎हिन्दी • ‎hrvatski • ‎magyar • ‎Bahasa Indonesia • ‎italiano • ‎日本語 • ‎ភាសាខ្មែរ • ‎한국어 • ‎Nederlands • ‎polski • ‎português • ‎português do Brasil • ‎română • ‎русский • ‎தமிழ் • ‎ไทย • ‎Türkçe • ‎Tiếng Việt • ‎粵語 • ‎中文(中国大陆)‎

அலைகள் லேசான நுகர்வி பயனர் இடைமுகம் முடிந்தவரை எளிதாகவும் உள்ளுணர்வுடனும் இருக்க முனைகிறது. அதன் இலக்கானது, பாரம்பரிய இணையதள வங்கி பயன்பாட்டின் பயனர் அனுபவத்தை மனதில் கொண்டு வெகுஜன தத்தெடுப்புடன் ஒத்துப்போவதாகும். சில விளக்கங்களுடன் தற்போதைய பயனர் இடைமுகத்தின் முழுமையான உள்ளடக்கத்தை கீழே காணலாம்.

பணப்பை

Lite Client Starting Page.PNG

இது உங்கள் கணக்கை அணுகும் போது அலைகள் லேசான நுகர்வியின் தொடக்கப் பக்கமாகும். இங்கு உங்கள் அலைகள், Bitcoin மற்றும் ஃபியட் நாணயங்களின்நிலுவைகளை காணலாம். மேலும், இந்த முகவரியின் கடைசி 10 பரிவர்த்தனைகளை இது காட்டுகிறது. பரிவர்த்தனை வரிசையின் வலது பக்கத்தில் சிறிய பொத்தானை அழுத்தி, அனுப்புநர் அல்லது பெறுநர் முகவரி, பரிவர்த்தனை ஐடி அல்லது இடைநிலைப்பலகையில்(clipboard) முழு வரிசையை நகலெடுக்க முடியும். மேலும், இங்கு சின்னங்களடங்கிய பட்டையும் உள்ளது - இதுபற்றிய மேலதிக விபரங்கள் கீழே காணலாம். மையத்தில் மிக உயர்ந்த இடத்தில் நீங்கள் அணுகும் கணக்கின் அலைகள் முகவரியை(address) - வலதுபுறத்தில் உள்ள சிறிய பொத்தானை அழுத்தி நீங்கள் முகவரியை நகலெடுக்கலாம். முகவரியை அடுத்து தற்போதைய அலைகள் தொகுதி கணக்கு எண்ணிக்கையை(Blockcain height) காணலாம். மேல் வலது மூலையில் அமைப்புகள் மற்றும் கணக்கு போன்ற இன்னும் சில செயல்பாடுகள் உள்ளன.

பணமனுப்புதல், மீளப்பெறுதல், வைப்புச்செய்தல்

பணமனுப்புதல்:

பெயர் குறிப்பிடுவதுபோல், உங்கள் கணக்கிலிருந்து ஒரு சொத்தை மற்றொரு கணக்கிற்கு அனுப்பலாம்.
மீளப்பெறுதல்: ஒரு நுழைவாயில்(Gateway) மூலம் ஒரு சொத்தை(token) திரும்பப்பெற அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டு: நீங்கள் Bitcoinஐ மீளப்பெறும்போது போது, நீங்கள் அலைகள் Bitcoin சொத்தை (WBTC) உண்மையான Bitcoin (BTC) சொத்திற்கு பரிமாற்றம் செய்கிறீர்கள்..
வைப்புச்செய்தல் : தான்தோன்றி யன்னல் (pop-up) தோன்றும் Bitcoinஐ அல்லது ஃபியட் நாணயத்தை எப்படிப் வைப்புச்செய்வது என்ற வழிமுறைகளுடன். தற்போது Bitcoinஉடன் மட்டுமே சாத்தியமாகும் .

வழிநடத்து பட்டை

வழிநடத்து பட்டை சின்னங்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சின்னங்களை பற்றிய மேலும் தகவலையும் கீழே காணலாம்.

பணப்பை:

இது அலைகள் லேசானநுகர்வியின் தொடக்கபக்கமாகும். கடந்த 10 பரிவர்த்தனைகள் உட்பட உங்கள் முகவரியின் மேலோட்டமாக ஒரு கண்ணனோடத்தை கொடுக்கிறது. இது தற்போதைய தொகுதி எண்ணிக்கையையும் அணுகப்பட்ட கணக்கின் முகவரிகளையும் காட்டுகிறது. மேலதிக விபரங்களை மேலே காண்க.
சொத்துத்தொகுப்பு : ஏற்கனவே பணப்பையில் காட்டப்பட்டுள்ளவை உட்பட, அணுகப்பட்ட கணக்கின் எல்லா சொத்துகளையும் எடுத்துக்காட்டாக Bitcoin (wBTC) காட்டுகிறது. இந்த பட்டையில் நீங்கள் சொத்துபரிமாற்றம் செய்யலாம் மற்றும் ஒரு சொத்து பற்றிய மேலும் தகவலைப் பெறலாம்.
அலைகள் பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மையம் : அலைகள் தளத்தில் உள்ள ஒவ்வொரு சொத்தையும் வாங்க, விற்க அல்லது பரிமாற்ற அனுமதிக்கிறது.
குத்தகைக்குவிடல் : இங்கு நீங்கள் உங்கள் அலைகளை குத்தகைக்குவிடலாம் .
வரலாறு: இங்கே நீங்கள் உங்கள் கணக்கிலிருந்து எல்லா பரிவர்த்தனை பார்க்க முடியும்.
நுண்நாணயம் உருவாக்கம்: தலைய்ப்பு விவரிப்பதுபோல், நீங்கள் விரும்பினால் இங்கு உங்கள் சொந்த நுண்நாணயத்தை வழங்கலாம்.
சமுகப்பட்டி : தற்போது, இந்த பட்டி பணப்பையினுள் ஒரு தொகுதி ஆய்வாளராக பயன்படுகிறது. அடுத்த கட்டத்தில், அலைகள் அமைப்பு தொடர்பான தளங்களுக்கான இணைப்புகளின் தொகுப்பாக இது மாற்றப்படும்.

காப்பு, விருப்பங்கள் மற்றும் பயனர் சுயவிவரம்

அலைகள் லேசான நுகர்வியின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள பொத்தான்கள் இவை.

காப்பு:

நீங்கள் உள்நுழைந்த கணக்கின் விதை, தனிப்பட்ட கடவுச்சொல் மற்றும் கடவுச்சொல் குறியிடப்பட்ட விதை மற்றும் தகவலை ஒரே பொத்தானை அழுத்தி நகலெடுக்கவும் ஒட்டவும் அனுமதிக்கிறது. இது நீங்கள் உங்கள் விதைஐ இழந்துவிட்டால் ஆனால் சேமித்த உள்நுழைவு மூலம் கணக்கு அணுகக்கூடியதாக இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது நீங்கள் காப்பு காகித நகலை மீண்டும் உருவாக்கலாம்.
விருப்பங்கள்: இன்னும் செயல்படுத்தப்படவில்லை. உங்கள் கணக்கிற்கான வெவ்வேறு அமைப்புகளை வரையறுக்க அனுமதிக்கும்.
பயனர் சுயவிவரம் : இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

சொத்துத்தொகுப்பு

சொத்துத்தொகுப்பு பட்டை நீங்கள் அந்தந்த கணக்கில் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் மேலோட்டமாகக் காண்பிக்கிறது .

Lite Client Portfolio Page.PNG


சொத்தின்பெயர்:

நாணயம் உருவாக்கபட்டபோது வழங்கப்பட்ட பெயர் . 'குறிப்பு' : நாணயப்பெயர்கள் தனிப்பட்டவை அல்ல! அதாவது ஒரே பெயரில் பல நாணயங்கள் இருக்கலாம்.எப்போதும் 'விவரங்கள்' என்ற பட்டையின் கீழ் 'அடையாளங்காட்டி' (ID) (மேலும் சொத்து அடையாளங்காட்டி என்றும் குறிப்பிடப்படுகிறது)ஐ சரிபார்க்கவும் - சொத்து அடையாளங்காட்டி மட்டுமே தனித்துவமானது.
வழங்கியவர் : ஒரு நாணயத்தை உருவாக்கிய முகவரி.
மறுவெளியீடுசெய்தல் : உண்மை அல்லது தவறு என்று பதிவுசெய்யலாம். "உண்மை" என பதிவுசெய்திருந்தால், ஒரு நாணயம் வழங்குபவர் ஆரம்ப விநியோகிப்பிற்குப் பிறகு மேலதிக நாணயங்களை உருவாக்கலாம் அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு நாணயத்தின் விநியோகத்தை அதிகரிக்கலாம். "தவறு" என பதிவுசெய்திருந்தால் , மொத்த விநியோகத்தை அதிகரிக்கமுடியாது . குறிப்பு: ஒரு நாணயத்தை முதல்முறை உருவாகும்போது மறுபடியும் மறுவெளியீடுசெய்தல் = "உண்மை" என பதிவுசெய்திருந்தால், பின்னர் ஒரு பிந்தைய கட்டத்தில் மறு வெளியீடு = தவறு என பதிவுசெய்யப்படலாம் .
நிலுவை : அணுகப்பட்ட கணக்கில் உள்ள ஒவ்வொரு சொத்தின் நிலுவையையும் காட்டுகிறது.
பணப்பரிமாற்றம்: வேறு ஒரு முகவரிக்கு ஒரு சொத்தை (பணத்தை) மாற்ற அனுமதிக்கிறது.
மறுவெளியீடு: நீங்கள் நாணயத்தை வழங்குபவர் என்றால் மற்றும் மறுவெளியீடுசெய்தல் = "உண்மை" என பதிவுசெய்திருந்தால் மட்டுமே பட்டை தென்படும். இது நாணயம் வழங்குவதை அதிகரிக்க அனுமதிக்கிறது. மறுவெளியீடு செய்யும் போது, மறுபடியும் தவறான மாற்றத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.
விபரங்கள் : அடையாளம் (சொத்து அடையாளங்காட்டி), மொத்த வழங்கல் மற்றும் வழங்கல் தேதி போன்ற சொத்து பற்றிய விவரங்களைக் காட்டுகிறது.
பெருந்திரள் பண வழங்கீடு: அனைத்து பங்குதாரர்களுக்கும் தங்கள் பங்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப அலைகளையும் அல்லது வேறு நாணயங்களையும் அனுப்புவதற்கு உங்களை அனுமதிக்கிறது. மேலும் ஈவுத்தொகை(dividend) அம்சம் என்றும் அழைக்கப்படுகிறது.

அலைகள் பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மையம்

அலைகள் பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மையம் அலைகள் தளத்தில் உள்ள ஒவ்வொரு சொத்தையும் வாங்க, விற்க அல்லது பரிமாற்ற அனுமதிக்கிறது.


DEX Tab.png


வாங்குவதற்கான கட்டளை:

தற்போதுள்ள வாங்குவததற்கான கட்டளைகளைக்காட்டுகிறது .
விற்பதற்கான கட்டளை: தற்போதுள்ள விற்பதற்கான கட்டளைகளைக்காட்டுகிறது .
வர்த்தக வரலாறு: ஒன்றிணைக்கப்பட்ட கடைசி பரிவர்த்தனைகளைக்காட்டுகிறது.
அலைகளை வாங்குதல்: அலைகள் வாங்குவதற்கான கட்டளையிட அனுமதிக்கிறது.
அலைகளை விற்றல் : அலைகள் விற்பதற்கான கட்டளையிட அனுமதிக்கிறது.
எனது கட்டளைகள் : உங்களுடைய ஒன்றிணைக்கப்பட்ட கடைசி பரிவர்த்தனைகளைக்காட்டுகிறது.


உறுதிப்படுத்தப்படாத சொத்துக்களை (பச்சை சரி அடையாளம் இல்லாத) பரிவர்த்தனை செயும்போது குறிப்பிட்ட சொத்தைத்தான் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்று இரட்டிப்பாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

குத்தகைக்குவிடல்

Waves Leasing Window.png


இருப்பு விவரங்கள்:

உங்களுடைய குத்தகை இருப்பு விவரங்களை உங்களுக்கு காட்டுகிறது.
இருப்பு குத்தகைக்குவிடல்: உங்கள் இருப்பை குத்தகைக்குவிட உங்களை அனுமதிக்கிறது.
குத்தகைப்பரிவர்தனை : உங்கள் குத்தகைப்பரிவர்தனைக்குரிய வரலாற்றைக் காண்பிக்கும்..

சொத்துபரிமாற்ற வரலாறு

அணுகப்பட்ட கணக்கிலிருந்து எல்லா பரிமாற்றங்களின் பட்டியலையும் வரலாற்றுத் பட்டை நீங்கள் பார்வையிட அனுமதிக்கிறது.

Lite Client History.PNG

தேதி:

தொகுதிச்சங்கிலியில்(Blockchain) ஒரு பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்ட சரியான நேர முத்திரை.
வகை: கணக்கில் அல்லது கணக்கிலிருந்து ஒரு பரிவர்த்தனை செய்யப்பட்டதா என்பதை அறியப்படுத்தும். அது உள்வரும் பரிமாற்றம் , வெளியேறும் பரிமாற்றம் அல்லது வெளியேறும் சொத்து வெளியீடு ஆக அமையலாம்.
பெயர்: பரிவர்த்தனை செய்யப்பட்ட நாணயத்தின் பெயர்.
அனுப்புநர்: பரிவர்த்தனை நிறைவேற்றப்பட்ட கணக்கு. அது நீங்களாகவோ அல்லது வேறு ஒரு அலைகள் முகவரியாகவோ இருக்கலாம்.
பெறுநர்: பரிவர்த்தனை பெற்ற கணக்கு. அது நீங்களாகவோ அல்லது வேறு ஒரு அலைகள் முகவரியாகவோ இருக்கலாம்.
கட்டணம்: பரிவர்த்தனை கட்டணமாக செலுத்தப்படும் அலைகளின் எண்ணிக்கை.
அலகுகள்: பரிமாற்றத்தில் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட நாணயங்களின் எண்ணிக்கை.

நுண்நாணய உருவாக்க பட்டை

இந்த பட்டையில், நீங்கள் உங்கள் சொந்த நாணயத்தை வெளியீடு செய்ய முடியும். தற்போதைய வெளியீட்டு கட்டணம் 1 அலைகள்ஆகும்.

Tokens creation Tab.PNG

பெயர்:

உங்கள் நாணயத்துக்கு ஒரு பெயரைக் கொடுங்கள்.
விபரம் உங்கள் நாணயத்தின் விபரத்தை இங்கு பதிவுசெய்யவும் அல்லது மேலதிக தகவலை எங்கே பெறலாம் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவும், உதாரணதிற்கு: உங்கள் வலயத்தளத்தின் முகவரி. தற்போது, தொடக்க வெளியீட்டிற்குப் பிறகு விபரத்தை மாற்ற முடியாது.
நாணயத்தின் எண்ணிக்கை: உங்கள் நாணயத்தின் மொத்த வழங்கலை (எண்ணிக்கையை) வரையறுக்கவும். மீண்டும் வழங்கக்கூடியது உண்மையாக அமைக்கப்பட்டால், அடுத்த கட்டத்தில் வழங்கலை அதிகரிக்கலாம்.
நாணயத்தின் தசமங்கள்: உங்கள் நாணயம் எத்தனை அலகுகளாக பிரிக்கப்படலாம் என்பதை வரையறுக்கவும். எடுத்துக்காட்டு: 5 க்கு அமைக்கப்பட்டால், உங்கள் நாணயத்தை 0.00001 அலகுகளாக பிரிக்கமுடியும்.
மறுவெளியீடு: பெட்டியைக் நிரப்புவதன் மூலம், உங்கள் நாணயத்தின் எண்ணிக்கையை அடுத்த கட்டத்தில் மறுவெளியீடுசெய்து அதிகரிக்க முடியும். நீங்கள் பெட்டியை நிரப்பாமல் விட்டால், நாணயத்தின் எண்ணிக்கையை அடுத்த கட்டத்தில் மறுவெளியீடுசெய்து அதிகரிக்க முடியாது.

சமூக பட்டை

சமூகம் பட்டை ஆதாரங்கள் & சேவைகள்களின் தொகுப்பாகும். இங்கு பயனர்கள் அலைகள் அமைப்பு மற்றும் தொடர்புடைய திட்டங்களைப் பற்றி மேலும் அறியலாம்.

ஆனால் தற்போது, இந்த பட்டை பணப்பையினுள் ஒரு தொகுதி ஆய்வாளராக பயன்படுகிறது.

Community Tab.PNG

எண்ணிக்கை :

தொகுதிச்சங்கிலியின் (Blockchain) தற்போதைய எண்ணிக்கை.
தேதி: தொகுதி உருவாக்கப்பட்ட மற்றும் தொகுதிச்சங்கிலியுடன் சேர்க்கப்பட்ட சரியான நேர முத்திரை.
பரிவர்த்தனைகள்: ஒரு தொகுதி உள்ளிட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை.
உருவாக்குபவர்: தொகுதியை உருவாக்கிய முழுமையான முனையின் முகவரி.