வழிகாட்டல்கள்: கணக்கு உருவாக்கம்

From Waves Wiki
Jump to: navigation, search
This page is a translated version of the page Tutorials: Account Creation and the translation is 100% complete.

நுண்ணறிவுப்பணப்பை, விதை மற்றும் கடவுச்சொல்

நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க முன், அலைகள் நுண்ணறிவுப்பணப்பை அமைப்பை பயன்படுத்துவதில் சில முக்கியமான விஷயங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். ஒரு நுண்ணறிவுப்பணப்பையில், உங்கள் சொந்த சாவிகளை வைத்திருக்கும் .dat கோப்பு இல்லை, ஆனால் நீங்கள் அவற்றை அணுகும் ஒரு (SEED) விதையாகும். விதை என்பது முன்னிருப்பாக 15 ஆங்கில வார்த்தைகளின் ஒரு சரம் மற்றும் அடிப்படையில் உங்கள் பணப்பையின் கடவுச்சொல் - 'நீங்கள் உங்கள் விதைஐ இழந்தால், உங்கள் கணக்கை அணுகவேமுடியாது . ' எனவே உங்கள் விதையை காகிதத்தில் எழுதி ஒரு பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க உங்களை அறிவுறுத்துகிறோம். நீங்கள் உங்களுடைய சொந்த விதைகளை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, எனினும், நாங்கள் அதை பரிந்துரைக்கவில்லை. அலைகள் அமைப்பினால் வழங்கப்பட்ட 15 ஆங்கில சொற்களாலான சரம் (SEED) ரகசியக்குறியீட்டுமுறையில் (cryptographically) மிகவும் பாதுகாப்பானது மற்றும் தற்போதைய தொழில்நுட்பம் மீறமுடியாததாக உள்ளது (வாடிக்கையாளர் வழங்கிய கடவுச்சொல் 2048 ^ 15 தடவைகளில் மீறக்கூடியதாகும் ).

ஒவ்வொரு விதையும் ஒரு அலைகள் கணக்குடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலக்கமும், எழுத்தும் , சின்னமும், இடைவெளிகளும் முக்கியமாகும் - ஒரு இடைவெளி அதிகமாக இருந்தால்கூட, ஒரு வித்தியாசமான கணக்கு திறக்கிறது. ஒரு தவறான குறியீடு இருந்தால், வேறு கணக்கு திறக்கிறது. எழுத்துப்பிழை இருந்தால், வேறொரு கணக்கு திறக்கிறது.

கணக்கு உருவாக்கத்தின்போது, உங்கள் கணக்குக்கு ஒரு கடவுச்சொல்லை உருவாக்க கேட்கப்படுவீர்கள். கடவுச்சொல் இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது: முதலாவதாக, அது விதையை தன்னகத்தே குறியாக்கம் செய்கிறது, எனவே விதை பாதுகாப்பற்ற பிணையத்திற்கு அனுப்பப்படாது. இரண்டாவதாக, உங்களுடைய கணக்கு தற்காலிக சேமிப்பு செய்யப்படும், எனவே நீங்கள் விதையை புதிய பதிப்பிலிருந்து ஒவொருமுறையும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. கடவுச்சொல் பாதுகாப்பால் நீங்கள் மட்டுமே உங்கள் சேமித்த கணக்கில் உள்நுழைய முடியும். உங்கள் கடவுச்சொல்லை இழக்க நேர்ந்தால், நீங்கள் உங்கள் நுண்ணறிவுப்பணப்பையை பயன்படுத்தி, சேமித்த கணக்கை நீக்கலாம், பின்பு உங்கள் விதையை உபயோகித்து சேமித்த கணக்கை மறு-இறக்குமதி செய்து . புதிய கடவுச்சொல்லை வரையறுக்கவும்.

எப்படி ஒரு கணக்கை உருவாக்குவது

முன்மொழியப்பட்ட விதையுடன் கணக்கு உருவாக்கம்

கூகிள் குரோம் மென்பொருளை அல்லது அலைகள் லேசான முழுமையான நுகர்வியை பயன்படுத்தி உங்கள் லேசான நுகர்வியைர்வியை திறக்கவும். இதுவரை நீங்கள் லேசான நுகர்வியைர்வியை நிறுவவில்லை எனில், நிறுவல் வழிகாட்டியை பார்க்கவும்.

Lite Client Main Page

'புதிய கணக்கு' பொத்தானை அழுத்தவும், பின்பு 'புதிய கணக்கு அறிவிப்பை ' கவனமாக வாசித்தபின், 'நான் புரிந்துகொண்டேன் ' .பொத்தானை அழுத்தவும்.

Lite Client Account Registration

மேலே குறிப்பிட்டுள்ளபடி, 15 ஆங்கில வார்த்தைகளை உள்ளடக்கிய விதைஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். விதை உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்படும் மொத்த ஆங்கில சொற்கள் 2048 ஆகும். இது 2048 ^ 15 வெவ்வேறு சாத்தியக்கூறுகளைக் கொடுக்கிறது - தற்போதைய தொழில்நுட்பம் மீறமுடியாததாக உள்ளது. ஒவ்வொரு விதையும் முன்மொழியப்பட்ட விதையின் அடியில் காட்டப்படும் ஒரு தனிப்பட்ட முகவரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்து, உங்கள் புதிய கணக்குக்கு ஒரு பெயரை சூட்டலாம். ஒரு புதிய கணக்குக்கு பெயரிடுவது அவசியமானதுஅல்ல ஆனால் நீங்கள் பல கணக்குகளை வைத்திருந்தால், புதிய கணக்குக்கு பெயரிடுவது உபயோகமானது. உங்கள் புதிய கணக்கின் பெயர் லேசான நுகர்வியின் முக்கிய பக்கத்தில் உள்ள கணக்குகளின் பட்டியலில் காண்பிக்கப்படும், மேலும் மறைகுறியாக்கப்பட்ட விதையுடன் பதிவுசெய்யப்படும்.

இறுதியாக உங்கள் கணக்கிற்கான கடவுச்சொல்லை நீங்கள் வரையறுக்க வேண்டும். கடவுச்சொல்லின் ஒரே நோக்கம் விதையினை ரகசியக்குறியீடு ஆக்குவதாகும் , அது உங்கள் விதையினை கணனியில் வெற்று உரை வடிவத்தில் விட்டு விடாது. உங்கள் கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்டால், பாதிக்கப்பட்ட கணக்கை பிரதான பக்கத்தில் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு உங்கள் விதையினை பயன்படுத்தி மீண்டும் இறக்குமதி செய்து, மேலே விவரித்துள்ள அதே செயல் வழியாக சென்று ஒரு புதிய கடவுச்சொல்லை அமைக்க முடியும்.

நீங்கள் மேல்சொன்ன எல்லாவற்றையும் செய்தபின் , 'பதிவு' ('Register) பொத்தானை அழுத்தினால் , நீங்கள் பயனர் இடைமுகத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

நீங்களே உருவாக்கிய விதையுடன் கணக்கை உருவாக்கல்

நீங்களே உருவாக்கிய விதையுடன் ஒரு கணக்கை உருவாக்க விரும்பினால், ஒரு கணக்கை இறக்குமதி செய்க வழிகாட்டலை பின்பற்றவும் மற்றும் நீங்களே உருவாக்கிய விதையை உள்ளிடவும். மீதமுள்ள செயல்முறை மேலே கூறியது போலவே: ஒரு பெயர் மற்றும் கடவுச்சொல்லை அமைத்து கணக்கை பதிவு செய்யவும்.

'குறிப்பு:' அலைகள் அமைப்பினால் வழங்கப்பட்ட விதை பயன்படுத்துவதை நாங்கள் வலுவாக பரிந்துரைக்கிறோம். இது குறியாக்கவியல் பாதுகாப்பானது மற்றும் தற்போதைய கருவிகள் மூலம் உடைக்க முடியாது. நீங்கள் இன்னும் உங்கள் சொந்த விதைஐ உருவாக்க விரும்பினால், அதை குறைந்தபட்சம் 35 எழுத்துகள் கொண்டிருப்பதை உறுதி செய்து மேல் மற்றும் கீழ் எழுத்து எழுத்துகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்துங்கள்.