அம்சங்கள்

From Waves Wiki
Jump to: navigation, search
This page is a translated version of the page Features and the translation is 100% complete.

Other languages:
العربية • ‎čeština • ‎Deutsch • ‎Ελληνικά • ‎English • ‎español • ‎français • ‎hrvatski • ‎Bahasa Indonesia • ‎italiano • ‎日本語 • ‎Nederlands • ‎polski • ‎português • ‎português do Brasil • ‎română • ‎русский • ‎தமிழ் • ‎ไทย • ‎Türkçe • ‎Tiếng Việt • ‎粵語 • ‎中文(中国大陆)‎

அலைகள் லேசான நுகர்வி

Waves Lite Client April 2017

அலைகள் லேசான நுகர்வி என்பது உத்தியோகபூர்வ பணப்பையை மென்பொருளாகும் மற்றும் இது வெகுஜன அங்கீகாரத்தை மனதிற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.அலைகள் லேசான நுகர்வி மென்பொருள் மிக இலகு எடை கொண்டது (~ 5MB) எனவே விநாடிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயனர் இடைமுகம் பாரம்பரிய இணையதள வங்கி இடைமுகங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது, இது முக்கியமாக பயன்படுத்த எளிதானதாகும். அலைகள் லேசான முழுமையான நுகர்வியை எங்கள் GitHub இலிருந்து தரவிறக்கம் செய்யலாம் அல்லது கூகிள் குரோம் மென்பொருளை (Google Chrome app) . தரவிறக்கம் செய்யலாம். அலைகள் லேசான நுகர்வியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நீங்கள் ஒரு தொகுதிச்சங்கிலியை (Blockchain) பதிவிறக்க தேவையில்லை. அலைகள் லேசான நுகர்வி அலைகள் வலையமைப்புக்கணுவுடன்(Node) நேரடியாக தானாகவே இணைந்துகொள்ளும் . இந்த அம்சங்கள் அனைத்தும் ஒரு இலகுவான, வேகமான செயல்முறைக்கு, அமைப்புக்கு வழிவகுக்கிறது - நிறுவல் மற்றும் கணக்கு உருவாக்கம் செய்ய அதிகபட்சம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்!

அலைகள் லேசான நுகர்வி பல நாணயங்களை உள்ளடக்கக்கூடிய ஒரு பணப்பை என அழைக்கப்படலாம். இது அலைகளை மாத்திரம் இல்லாமல் அலைகள் தொகுதிச்சங்கிலியால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு நாணயத்தையும் தன்னுள் வைத்திருக்கக்கூடியது. . அது மாத்திரம் அல்லாமல் அது ஒரு பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மையமாகவும் செயற்பட்டு மேற்சோன்ன தனிப்படட நாணயங்களையும் அலைகளையும் ஒன்றுக்கு எதிராக மற்றையதை பணப்பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.. மேலும் இங்கு, ஒரு பரவலாக்கப்பட்ட வாக்களிப்பு முறை, ஒரு மறைகுறியாக்கப்பட்ட செய்திபரப்புமுறை, ஒரு தொகுதி ஆய்வாளர் மற்றும் புகழ் மதிப்பீட்டு அமைப்பு உட்பட பல கூடுதல் அம்சங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அலைகள் கைத்தொலைபேசி நுகர்வி

அலைகள் லேசான நுகர்வி Android மற்றும் IOS பயன்பாட்டிற்காக மறுவடிவமைக்கப்படுள்ளது . இது Google Play மற்றும் Apple stores இல் கிடைக்கிறது . ஏற்கனவே பல ஆயிரம் பதிவிறக்கங்கள் உள்ளன. அலைகள் கைத்தொலைபேசி நுகர்வி பயனர்கள் பணம் செலுத்துவதற்கும், அவர்களின் நிலுவையை சரிபார்க்கவும், எதிர்காலத்தில், பயணத்தின்போது வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கும்.

தனிப்பயன் நுண்நாணயங்கள் (CATs)

Custom tokens.PNG

தனிப்பயன் நுண்நாணயங்கள் (CATs), நுண்நாணயங்களின் எளிய வடிவமாக இருக்கின்றன. இவை அடிப்படையான தொகுதிச்சங்கிலியால் ரகசியக்குறியீட்டுமுறையில் பாதுகாக்கப்படுகின்றன. வணிகத்தின் நலன்களையும் தேவைகளையும் இணைத்து அலைகள் பணித்தளத்தை கட்டமைப்பதன் மூலம், அலைகள் பணித்தளம் நுண்நாணயங்களை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச்செல்கிறது. இதன் இலக்கு ஒவ்வொரு பயணரும், முந்தைய அனுபவம் எதுவுமில்லாமல், தனது சொந்த தனிப்பயன் நுண்நாணயங்களை வெளியிடுவதும் நிர்வகிக்க முடிவதும் ஆகும். பயனரின் திட்டங்களை அலைகள் பணித்தளத்தில் பரிசோதனை செய்வதை ஊக்கிவிக்குமுகமாக நுண்நாணயங்களை வெளியிடுவதற்கான கடடனமாக, மிக மலிவாக, ஒரு அலைகள் மட்டுமே அறவிடப்படுகிறது.மேலும், அலைகள் முடிந்தவரை நுண்நாணயங்களை தனிப்பயனாக்கத்தக்க வகையில் அதன் அடையாளங்களை உருவாக்க முனைகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் விரும்பினால், நுண்நாணயங்களை உருவாக்கியபின் அவற்றின் எண்ணிக்கையை, பின்பு மறுவெளியீடுசெய்து, உயர்த்தமுடியும்.


அலைகள் பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மையம்

Dex - First Version
Dex - Mockup of possible future version

Waves Dex - அலைகள் பணித்தளத்தின் ஒரு பகுதி . பரவலாக்கப்பட்ட பரிமாற்றம் சொத்துக்கு சொத்து வர்த்தகத்தை தனித்துவமான வகையில் அனுமதிக்கிறது - மையப்படுத்தப்பட்ட கட்டளை இணை ஒப்புநோக்கல் முறையுடன் பரவலாக்கப்பட்ட கட்டளை தீர்வுமுறையுடன் இணைந்திருக்கிறது. இதன் பொருள், இணைஒப்புநோக்கி (Matcher) என்றழைக்கப்படும் மென்பொருளினால் (வாங்கல்-விற்றல்) கடடளைகள் ஒப்புநோக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படுகின்றன. இது யாராலும் இயங்கக்கூடிய ஒரு மென்பொருளாகும். ஒரு வெற்றிகரமான ஒன்றிணைப்பின்பின் (வழக்கமாக இதற்கு ஒரு சிறு மணித்துளியே தேவைப்படும்), மாற்றிக்கொள்ளப்படவேண்டிய நிதிகள் தொகுதிசங்கிலியூடாக மாற்றப்படும். இதன் விளைவாக, மையப்படுத்தப்பட்ட பரிமாற்றங்களில் நாம் வேகமாக வர்த்தகம் செய்கிறோம், இருப்பினும், நிதி ஒரு பயனரின் கணக்கை விட்டுநீங்காது. இது நிதிப்பரிமாற்ற ஊடுருவல்(exchange hack) ஆபத்தை அகற்றும்.

அலைகள் எனும் பாரிய திட்டத்தினூடாக நோக்கையில், அலைகள் பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மையம்(DEX) பல பயனுள்ள அம்சங்களை கொண்டுள்ளது:

  • பொதுமக்கள் நிதிவைத்தலூடாக(crowdfunding), பங்குகளை ஆரம்ப வர்த்தகத்தில் அனுமதிக்கிறது. Kickstarter இல் ஒரு முதலீட்டாளர் திட்டத்தின் பங்குகளை வர்த்தகம் செய்ய முடியாது.
  • ஒரு பரவலாக்க முறையில் நுண்நாணயங்கள் மற்றும் அந்நிய செலாவணி வர்த்தகத்தை செயல்படுத்துகிறது.
  • வேகம் மற்றும் குறிப்பாக தரகுப்பண அடிப்படையில் பாரம்பரிய, மையப்படுத்தப்பட்ட நுண்நாணய பரிமாற்றங்களுடன் போட்டியிடுகிறது.

அலைகள் பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மைய பயனர் இடைமுகம் ஏப்ரல் 2017 ல் வெளியிடப்பட்டது. முதல் பதிப்பு, மேம்பட்ட பயனர்கள் மட்டுமின்றி, எல்லோராலும் பயன்படுத்தக்கூடியவகையில் அடிப்படை அம்சங்களுடன் வடிவமைக்கப்ட்டுள்ளது. இந்த வரைகலையில்(GUI) அடுத்த மாதம், வரைபடங்கள் மற்றும் இன்னும் கூடுதலான அம்சங்கள் இடம்பெறும்.

நாணயங்களின் இணக்கத்தன்மை

மற்றொரு பெரிய முன்னேற்றமாக நாம் கருதுவது நாணயங்களின் இணக்கத்தன்மை. இது அலைகள் பயனர்களுக்கும், அதிலுள்ள செயல்திட்டங்களுக்கும், அலைகள் அல்லாத, அலைகள் தொகுதிச்சங்கிலியில் இருக்கும் வேறு எந்த நாணயத்திலும் பரிமாற்றக் கட்டணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வொரு முழுவலைஅமைப்புக்கணுவும்(full node) எந்த நாணயத்தை பரிவர்த்தனை கட்டணமாக ஏற்றுக்கொள்வது என்பதை தானாகவே வரையறுக்க முடியும். இது ஒரு மூடிய சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு வணிகங்களை அனுமதிக்கிறது, அதில் அவர்கள் ஒரு சொந்தமான நாணயத்தை மட்டும் பயன்படுத்தலாம் அதற்கு பதிலாக, இரண்டாவது, தங்களது அலைகள் என்ற கணக்கை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அலைகள் தொகுதிச்சங்கிலியில் அரசு நிர்ணயநாணயங்கள்(Fiat)

மேலே குறிப்பிடப்பட்ட தனிப்பயன் நுண்நாணய தொழில்நுட்பம் அலைகள் பணித்தளத்திதல் அமெரிக்க டொலர், யூரோ அல்லது சீன யுவான் போன்ற fiat currencies நாணயங்களை தொகுதிச்சங்கிலியில் வழங்குவதற்கு அனுமதிக்கிறது. இது சட்டப்படி இணக்கமான பணப்பரிவர்த்தனை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன் முழுமையான பெறுமதி உறுதிப்படுத்தப்பட்ட அரசு நிர்ணயநாணயங்களின் நுண்நாணயங்களை அலைகள் பணித்தளத்திதல் வழங்குவதன் மூலம் செயட்படுத்தக்கூடியதாக உள்ளது. பரவலாக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை மையம்த்தினூடாக, இது பயனர்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தை மற்றும் அரசு நிர்ணயநாணயங்களுக்கு எதிராக நுண்நாணய வர்த்தகத்தை செய்ய அனுமதிக்கிறது. மேலும் Bitcoin வழியாக சென்று, இரட்டை மாற்றத்தை செலுத்துவதன் சிக்கலைத் தவிர்க்கிறது. மேலும், அலைகளில் எதிர்காலத்தில் பொதுமக்கள் நிதிவைத்தலில் (Crowd funding) அரசு நிர்ணயநாணயங்களையும் ஏற்றுக்கொள்ளும் சாத்தியத்தை உருவாகும்.

இவை அனைத்தும் சட்டப்படி இணக்கமான வழியில் இடம்பெறும் : KYC (உங்கள் வாடிக்கையாளரை அறியவும்) மற்றும் AML (பணமோசடி எதிர்ப்பு) சம்பந்தமான தகவல்கள் எந்தவொரு நபர் அரசு நிர்ணயநாணயத்தை பணப்பரிவர்த்தனை மைய நுழைவாயிலில் வைப்புசெயும்போது அல்லது மீளப்பெறும்போது பெற்றுக்கொள்ளப்படும்.

அலைகள் தொகுதிச்சங்கிலியில் நுண்நாணயங்கள்

ஒரு தனிபயன் நுண்நாணயம் ஏற்கனவே தனது சொந்த தொகுதிச்சங்கிலியில் இருக்கும் ஒரு நுண்நாணாணயத்தை அலைகளில் இணைக்க பயன்படுகிறது. ஏற்கனவே இது அலைகளில் இருக்கும் Bitcoin இக்கு பொருந்தும் - பயனர்கள் நேரடியாக அலைகள் லேசான நுகர்வியில் Bitcoin ஐ வைப்புச்செய்து, மீளப்பெறமுடியும். அலைகள் தொகுதிச்சங்கிலியில் இருக்கும் Bitcoins 'wBTC' என்ற குறியீட்டுடன் உள்ளன, மேலும் அவை Bitcoin உடன் முழுமையான பெறுமதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளன (BTC 1:1wBTC). ஒரு பயனர் Bitcoin ஐ பல கையொப்ப நுழைவாயிலூடாக வைப்புச்செயும்போது, அது பயனர்களுக்கான அலைகள் சங்கிலியில் wBTC நுண்நாணாணயத்தை வெளியிடுகிறது. ஒரு பயனர் wBTC ஐ மீளப்பெறவிரும்பினால் அலைகள் wBTC ஐ பல கையொப்ப நுழைவாயிலுக்கு அனுப்ப அது அங்கு BTC ஆக மாற்றப்பட்டு வைப்புச்செய்யப்படுகிறது.

இந்த அணுகுமுறை வேகமான மற்றும் குறிப்பாக, மலிவான Bitcoin பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது, குறிப்பாக Bitcoin நின் தற்போதைய தொகுதிகள் பிரச்சினைஐ தவிர்க்க தேவைப்படுகிறது. மேலும், அலைகளில் எதிர்காலத்தில் பொதுமக்கள் நிதிவைத்தலில் (Crowdfunding) Bitcoin தொகுதிச்சங்கிலியின் நேரடி தொடர்புஇல்லாமல் Bitcoinஐ ஏற்றுக்கொள்ளும் சாத்தியத்தை உருவாகும்.

இந்த அணுகுமுறை எந்த நுண்நாணயத்திற்கும் செயல்படுத்தப்படலாம். வெறுமனே ஒரு நுழைவாயில் அமைத்து , ஒரு அலைகள் நாணயத்தை உருவாக்கினால், அலைகளில் மற்றொரு நுண்நாணயம் உருவாகிவிடும் (Bitcoin- BTC ல் இருந்து wBTC ஐ உருவாக்கியதுபோல்).

குத்தகைக்குவிடுதல்

குத்தகைக்குவிடுதல் என்பது உங்கள் அலைகளின் உருவாக்கும் சக்தியை ஒரு முழுவலைஅமைப்புக்கணுவுக்கு (full node) கொடுத்தலாகும். குத்தகைக்குவிடும்போது உங்கள் அலைகள் உண்மையில் உங்கள் பணப்பையை விட்டு நீங்காது. இது எல்லோரையும் ஒரு முழுவலைஅமைப்புக்கணுவை தானே இயக்காமல் அலைகள் உருவாக்கத்தில் பங்கேற்க வழிவகுக்கிறது. மேலும் குத்தகைக்குவிடுபவர், குத்தகை எடுக்கும் அமைப்பு அமைத்துள்ள நிபந்தனைகளைப் பொறுத்து, அலைகள் உருவாக்க வெகுமதியின் ஒரு பகுதியைப் குத்தகையாக பெறுகிறார். ஒரு குத்தகையை உருவாக்க அல்லது ரத்து செய்வதற்கான காலக்கெடு அலைகள் தொகுதிச்சங்கிலியில் 1000 தொகுதிகள் உருவாக்குவதற்கு எடுக்கும் நேரமாகும். முக்கியமாக, இது அலைகள் உருவாக்கப்படும் வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது, இதனால் இது அலைகள் வலையமைப்பை கணிசமாக பலப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் அலைகளை குத்தகைக்குவிடும்போது குத்தகையுடன் மேலதிகமாக அலைகள் வலையமைப்பில் பங்கேற்கும் வேறு நுண்நாணயங்களையும் இலவசமாக பெறுவீர்கள்

பரவலாக்கப்பட்ட நன்மதிப்பு அளவிடல் அமைப்பு (தற்போது உருவாக்கத்தில் உள்ளது)

ஒரு பரவலாக்கப்பட்ட சூழலில் வியாபாரத்தை நடத்த நம்பிக்கை நிறைய தேவைப்படுகிறது. ஒரு நபரின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கான ஒரு கூடுதல் வழிமுறையாக, அலைகள், அலைகள் தொகுதிச்சங்கிலியில் அவரது நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட நன்மதிப்பு அளவிடல் அமைப்பு முறைமையை உருவாக்கவுள்ளது. அவரது நடவடிக்கை, கணக்கு உருவாக்கப்பட்ட தேதி, பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் பல அம்சங்களை கணக்கிலெடுத்து அளவிடப்பட்டும்

மறைகுறியாக்கப்பட்ட செய்திபரிவர்தகர் (தற்போது உருவாக்கத்தில் உள்ளது)

அலைகள் லேசான நுகர்வி ஒரு கட்டத்தில் ஒரு மறைகுறியாக்கப்பட்ட செய்திபரிவர்தகரையும் உள்ளடக்கியிருக்கும். அது அலைகள் தொகுதிச்சங்கிலியின் உள்ளோ அல்லது புறமோ கட்டமைக்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மிக முக்கியமாக இது நம்பகமான மற்றும் உடையாததாக இருக்க வேண்டும். இதில் பாரம்பரிய செய்திபரிவர்தகர் மென்பொருள்களில் இருக்கும் குழுக்கள் மற்றும் பட்டியல்களை பயனர்களால் உருவாக்க முடியும்.

பரவலாக்கப்பட்ட வாக்களிப்பு (தற்போது உருவாக்கத்தில் உள்ளது)

தற்போதைய வாக்களிப்பு முறைமைகள் மிகவும் எளிதாக பொலிவாக்களிக்கக்கூடிய முறைகளாகும். இப்போது ஒரு பரவலாக்கப்பட்ட வாக்களிப்பு முறையை கற்பனை செய்து கொள்ளுங்கள், இது ஒவ்வொரு வாக்கையும் தொகுதிச்சங்கிலியில் பதிவு செய்யும் - எந்த வகையிலும் பொலிவாக்கு பதிவுசெய்ய முடியாது. வாக்குகளை வெவ்வேறு அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டைவையாக அமைக்க முடியும்: ஒரு கணக்கிற்கு 1 வாக்கு,1 நுண்நாணயதிற்கு ஒரு வாக்கு, 1 வாக்குக்கு ஒரு வாக்கு அல்லது 1அலைகளுக்கு ஒரு வாக்கு. இது திட்டங்களை இயக்குவோர் அவர்களது பங்குதாரர்களுடன் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கும், நிதிகளின் பெரும் பரிமாற்றத்தை அனுமதிக்க அல்லது ஒரு புதிய மூலோபாயத்தைத் தீர்மானிக்க உதவும் - சாத்தியக்கூறுகள் முடிவற்றவை. இந்த வாக்கு முறைமை அலைகள் லேசான நுகர்வியிலும் சேர்க்கப்படும்.

அலைகள் புதிய தலைமுறை நெறிமுறை(Waves NG Protocol) பிரச்சனை அறிக்கையும் ஊக்கமும்

தொகுதிச்சங்கிலி நெறிமுறையில் உள்ள சில அளவிடக்கூடிய வரம்புகள் மற்றும் சவால்களினால் செயல்திறனுக்கும் செயலற்றநிலைக்கும் இடையில் ஈடுகட்டவேண்டிய நிலை உள்ளது.

தற்போதைய தொகுதிச்சங்கிலி நுட்பத்தினால் வேகமாக தொகுதிச்சங்கிலியில் அதிக பரிவர்த்தனைகளை சேர்ப்பதற்கு செயல்த்திறனை அதிகரிக்கமுடியாதுள்ளது என்ற சவாலை நாம் கருதிற்கொள்ள வேண்டியுள்ளது.

Bitcoin அகழ்வோர், நுகர்வோர் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் ஆகியோருக்கு இடையே தொகுதிச்சங்கிலியில் செயல்த்திறனை அதிகரிப்பதற்கான தேவைபற்றி ஒரு ஐக்கியப்பட்ட உடன்பாடு உள்ளது. மேலும் Bitcoinநின் விரிவாக்கத்தை மேம்படுத்துவது குறித்து தொடர்ந்து வாதம் உள்ளது. தற்போதைய பரிந்துரைகள் தொகுதிகள் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் மற்றும் எதிர்காலத்தில் தொகுதிகளின் அளவை அதிகரிப்பதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் குறித்து கவனம் செலுத்துகின்றன.

அனைத்து பரிந்துரைகளும் ஒரு பெரிய அளவிலான செயல்திறன் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றன:

தொகுதி அளவு எவ்வளவு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தொகுதிச்சங்கிலி அதிசிறந்த பரிவர்த்தனை செயல்திறனை அடைந்தாலும் இது தற்போது வினாடிக்கு ~ 3 பரிவர்த்தனைகளை விநாடிக்கு ~ 7 பரிவர்தனைகளாக அதிகரிக்குமே அல்லாது அதற்குமேல் அதிகரிக்க உதவாது . VISA பரிவர்த்தனைகள் போன்ற தற்போதைய கணினிகளுடன் போட்டியிட தேவையான வினாடிக்கு 30,000 பரிவர்தனைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிக குறைவாகும். அதே பெரிய அளவிலான செயல்திறன் குறைபாடுகளை Bitcoin, Ethereum மற்றும் Bitcoin தொகுதிச்சங்கிலி நெறிமுறையை பகிர்ந்துகொள்ளும் மற்ற அனைத்து நாணயங்களும் கொண்டுள்ளன.

அலைகள் புதிய தலைமுறை நெறிமுறை வலையமைப்பு நிலைமைகளைச் சார்ந்து, வலையமைப்பு அதிசிறந்த பரிவர்த்தனை செயல்திறனை அடைய அவனசெய்யும். இது பரிவர்த்தனை செயல்திறனை அதிகரிப்பதுமட்டுமல்லாது, இது பரிமாற்ற செயலற்றநிலைத்தன்மையை குறைக்கும். எனவே சில நிமிடக்களுக்கு பதிலாக சில நொடிகளில் ஒரு ஆரம்ப பரிவர்த்தனை உறுதிப்படுத்தலை பெற முடியும். இவையனைத்தும் Bitcoinநின் கட்டமைப்பு மற்றும் நம்பிக்கை தன்மையை மாற்றியமைக்காது சாத்தியமாகும்.

மேலதிக தொழில்நுட்ப விபரங்களுக்கு Github Waves NG